ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் அலுவலகம் தீ வைத்து அழிப்பு! நடந்தது என்ன குற்றம்?

 கம்பஹா, பியகம ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் அலுவலகம் நேற்று மாலை சிலரால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. 

இந்த சம்பவத்தில் கட்சி அலுவலகத்தின் அனைத்து பேனர்கள் மற்றும் பதாதைகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

ஐக்கிய தேசிய கட்சியின் பியகம தொகுதியின் முன்னாள் உள்ளுராட்சி மன்ற தலைவரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பிரசன்ன சம்பத், இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில்,

"மக்கள் விடுதலை முன்னணியை சேர்ந்தவர்களே இவ்வாறு தீ வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மீகவத்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்" என மேலும் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் அலுவலகம் தீ வைத்து அழிப்பு | Unp Election Office Fired

தீக்கிரையாக்கப்பட்ட அலுவலகம் கடந்த 26ஆம் திகதி பியகம தேர்தல் தொகுதிக்குட்பட்ட தரனகம பகுதியில் திறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Post a Comment

Previous Post Next Post