சென்னையில் தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.960 உயர்வு..!


சென்னையில் ஆபரணத் தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ. 960 உயர்ந்துள்ளது.

தங்கம் விலை அவ்வப்போது உயர்வதும், குறைவதுமாக போக்கு காட்டி வந்தாலும், கனிசமாக விலையேற்றம் கண்டுவந்துள்ளதே நிதர்சனம். இந்த வார தொடக்கத்தில் தொடர்ந்து மாற்றமின்றி விற்பனையாகி வந்த தங்கம் விலை நேற்று சவரனுக்கு 80 ரூபாய் சரிந்தது. நேற்றைய தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.6,705க்கும், ஒரு சவரன் ரூ.53,640க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில் சென்னையில் ஒரே நாளில் தங்கம் விலை கிராமுக்கு 120 ரூபாயும், சவரனுக்கு 960 ரூபாயும் ஏற்றம் கண்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி சென்னையில் இன்று தங்கம் விலை ஒரு கிராம் ரூ.6,825க்கும் , 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ. 54,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை 3 ரூபார் 50 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ. 95க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலையேற்றம் நகைப்பிரியர்கள், இல்லத்தரசிகளிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

Previous Post Next Post