தேர்தலில் 71 இலட்சம் வாக்குகளுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...!













ரணில் விக்கிரமசிங்க 71 இலட்சம் வாக்குகளைப் பெற்று ஜனாதிபதித் தேர்தல் களத்தில் இறங்குவார் என நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அந்த போராட்டத்தில் பங்குகொள்ள அனைவரையும் அழைக்கிறோம் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

கேகாலை மாவட்ட உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்;

இந்த ஆண்டு பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 17,000,000. இந்த நாட்டில் சராசரி வாக்கு சதவீதத்தின்படி 85% மக்கள் வாக்களிப்பார்கள் என்று கருதும் போது, ​​வாக்குகளின் எண்ணிக்கை சுமார் 13,600,000 ஆகும். ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவதற்கு தேவையான வாக்குகள் 51% அல்லது 6,936,000 ஆகும். 2020 பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுன பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 6,853,690 ஆகும்.

ஐக்கிய மக்கள் சக்தி பெற்ற வாக்குகள் 2,771,980 ஆகும். இது தவிர தேசிய மக்கள் சக்தி 445,958 வாக்குகளையும் ஐக்கிய தேசியக் கட்சி 250,000 வாக்குகளையும் பெற்றுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியின் 250,000 வாக்குகளும், பொதுஜன பெரமுனவின் 69 இலட்சம் வாக்குகளும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்குச் செல்வதால், அவருக்கு 71 இலட்சம் வாக்குகள் என்ற தெளிவான பலம் இருப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதிலிருந்து பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவுக்கு 10 இலட்சம் வாக்குகளும், தேசிய மக்கள் சக்திக்கு 10 இலட்சம் வாக்குகளும் பகிர்ந்தளிக்கப்பட்டால், 51 இலட்சம் வாக்குகள் ரணில் விக்கிரமசிங்கவுக்குக் கிடைக்கும்.
கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் 28 இலட்சம் வாக்குகள் பயன்படுத்தப்படாததால், இம்முறை 10 இலட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நிச்சயம் கிடைக்கும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும், ரணில் விக்கிரமசிங்க வடக்கு, கிழக்கு மக்களின் நம்பிக்கையைப் பெற்ற தலைவர் என்றும் அதனால் அவர் பெரும்பான்மை வாக்குகளைப் பெறுவார் என்றும் அமைச்சர் கூறினார்.

Post a Comment

Previous Post Next Post