யுக்திய நடவடிக்கையின்போது 662 பேர் கைது...!


கடந்த 24 மணித்தியாலத்துக்குள் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின்போது போதைப்பொருள் குற்றம் தொடர்பில் 662 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்களில் 653 ஆண்களும் 09 பெண்களும் அடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களில் 08 பேர் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், போதைப்பொருட்களுக்கு அடிமையாகியுள்ள 07 பேரை புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களிடமிருந்து 221 கிராம் 821 மில்லி கிராம் ஹெரோயின், 244 கிராம் 771 மில்லி கிராம் ஐஸ், 362 போதை மாத்திரைகள் மற்றும் 634 கிராம் 09 மில்லி கிராம் கஞ்சா ஆகிய போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post