சுற்றுலா நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் காலி சர்வதேச மைதானத்தில் இடம்பெற்ற நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 63 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
275 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி, இன்றைய 5ஆம் நாளில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 211 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
காலி சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இடம்பெறும் இந்தப் போட்டியில், தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கட்டுகளையும் இழந்து 305 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
இதனைத் தொடர்ந்து தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி சகல விக்கட்டுகளையும் இழந்து 340 ஓட்டங்களைப் பெற்றது.
இந்த நிலையில், தமது 2ஆவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 309 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
இந்நிலையில், 275 ஓட்டங்களை நியூஸிலாந்து அணிக்கு வெற்றியிலக்காக நிர்ணயித்தது.
வெற்றியிலக்கை நோக்கித் தமது 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் நியூஸிலாந்து அணி இன்றைய 5ஆம் நாளில் 211 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து தோல்வியைத் தழுவியது.
அதற்கமைய, 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை அணி 1 – 0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.
போட்டியின் ஆட்டநாயகனாக இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் ஜயசூரிய தெரிவு செய்யப்பட்டார்.
Post a Comment