அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல்: 40 பேர் பலி ; 60 பேர் காயம்...!


காஸா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 40 பேர் உயிரிழந்ததுடன் 60 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் பல மாதங்களாக நீடித்து வருகின்ற நிலையில், இன்று (10) அதிகாலை தெற்கு காஸாவில் உள்ள கான் யூனுஸ் நகர் அருகே அல்-மவாசி பகுதியில் இடம்பெயர்ந்த பலஸ்தீனியர்கள் தங்கியிருந்த முகாம் மீது இஸ்ரேல் இராணுவம் குண்டுகள் வீசி நடத்திய தாக்குதலில் 40 பேர் உயிரிழந்ததுடன் 60 பேர் காயமடைந்துள்ளனர்.

தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றதுடன் காணாமல் போன 15 பேரை மீட்பதற்கான மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.

Post a Comment

Previous Post Next Post