38,000 டெங்கு நோயாளர்கள்...!


கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் நேற்று (16) வரை 38088 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதில் 24.8% நோயாளிகள் அதாவது 9451 நோயாளிகள் கொழும்பு மாவட்டத்தில் இருந்து பதிவாகியுள்ளனர்.

கம்பஹா மாவட்டத்தில் இருந்து 4381 நோயாளிகள், களுத்துறை மாவட்டத்தில் இருந்து 2097 நோயாளிகள் மற்றும் மேல் மாகாணத்தில் இருந்து 15929 நோயாளிகள், இது மொத்த நோயாளிகளின் எண்ணிக்கையில் 41.8% ஆகும்.

வட மாகாணத்தில் இருந்து 4738 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். மொத்த நோயாளிகளில் இது 12.4% ஆகும். மத்திய மாகாணத்தில் இருந்து 3895 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். மொத்த நோயாளிகளில் இது 10.2% ஆகும். வடமேற்கு மாகாணத்தில் இருந்து 2521 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இது சதவீதமாக 6.6% ஆகும்.
தென் மாகாணத்தில் இருந்து 2834 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். சதவீதம் 7.4%. சப்ரகமுவ மாகாணத்தில் இருந்து 3875 நோயாளிகள் பதிவாகியுள்ளனர், இது சதவீதமாக 10.2% ஆகும்.

இந்த மாதத்தில் 1446, கடந்த மாதம் 3897, ஜூலையில் 4506, மே மாதத்தில் 2647, ஏப்ரலில் 2234, மார்ச்சில் 3615, பிப்ரவரியில் 6007, ஜனவரியில் 10417 என மொத்தம்

கடந்த ஆண்டில் டெங்குவால் 17 பேர் உயிரிழந்துள்ளனர். வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட 10 பிரதேசங்களில் டெங்கு அதிக அபாய நிலையில் பரவி வருவதாக சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

Post a Comment

Previous Post Next Post