உத்தரப் பிரதேச மாநிலத்தில் தற்போது 11 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. உத்தரப் பிரதேச முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, வெள்ளத்தில் சிக்கி இதுவரை 17 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டின் ஜாகிர் காலணி பகுதியில் மழையால் மூன்று மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி 10 பேர் பலியாகினர். இந்த விபத்தில் 15 பேர் சிக்கிய நிலையில், 14 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
அதில் 9 பேர் பலியாகியுள்ளனர். தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்தில் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதியில் மழை பெய்துவரும் நிலையில் மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது. இதுதொடர்பாக உத்திரப் பிரதேச முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில், ‘இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 4 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 30 கால்நடைகள் பலியான நிலையில், பாதிக்கப்பட்ட 30 பேருக்கும், 3,056 வீடுகள் சேதமடைந்தது தொடர்பாகவும் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளது.
Post a Comment