1700 ரூபா 1350 ஆக குறைந்துள்ளது – மனோ கணேசன்…!


ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றி ஏற்கனவே உறுதியாகியுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

நாவலப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாவலப்பிட்டி பகுதிக்கு சிலிண்டர் ஒன்றை எடுத்து வந்து மஹிந்தானந்த அழுத்கமகே வியாபாரமொன்றை செய்யுமாறு தாம் சவால் விடுப்பதாகவும் மனோ கணேசன் தெரிவித்தார். அதனை அவரால் செய்ய முடியாது.

தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா நாளாந்த ஊதியம் வழங்குவதாக ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க உறுதி வழங்கிய போதிலும் 1350 ரூபாவாக அது குறைந்துள்ளதுடன் அதுவும் இதுவரை கிடைக்கவில்லையென பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post