சுமார் 14 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை...!



இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 14 இலட்சத்தை நெருங்கியுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, ஜனவரி முதல் செப்டெம்பர் மாதம் 08 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 1,395,773 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

அதிகளவான சுற்றுலாப் பயணிகள் பெப்ரவரி மாதத்தில் வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 218,350 ஆகும்.

இந்நிலையில், அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியா, பிரித்தானியா, ரஷ்யா, ஜெர்மனி மற்றும் சீனா ஆகிய நாடுகளிலிருந்து வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.அதன்படி, ஜனவரி முதல் செப்டெம்பர் மாதம் 08 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 1,395,773 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

அதிகளவான சுற்றுலாப் பயணிகள் பெப்ரவரி மாதத்தில் வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 218,350 ஆகும்.

இந்நிலையில், அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியா, பிரித்தானியா, ரஷ்யா, ஜெர்மனி மற்றும் சீனா ஆகிய நாடுகளிலிருந்து வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post