தேர்தல் பிரச்சார காலத்தில் பொதுச்சொத்துக்கள் துஸ்பிரயோகம் செய்யப்படுவது குறித்து டிரான்ஸ்பரன்சி இன்டநஷனல் கடும் கரிசனை வெளியிட்டுள்ளது.
பொதுச்சொத்துக்கள் துஸ்பிரயோகம் செய்யப்படுவது குறித்து 500க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக டிரான்ஸ்பரன்சி இன்டநஷனல் ஸ்ரீலங்காவின் நிறைவேற்று பணிப்பாளர் நதிசானி பெரேரா தெரிவித்துள்ளார்.
300 முறைப்பாடுகள் தொடர்பில் ஏற்கனவே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுச்சொத்துக்கள் துஸ்பிரயோகம் செய்யப்படுவது குறித்து பொதுமக்கள் விரக்தியடைந்துள்ளனர்,அரசியல் நோக்கங்களிற்காக பொதுச்சொத்துக்களை பயன்படுத்துபவர்களை பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்துவது குறித்து மக்கள் ஆர்வமாக உள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment