ICC மகளிர் T20 கிரிக்கெட் உலகக் கிண்ண தொடர் அடுத்த மாதம் பங்களாதேஷில் நடைபெற இருக்கிறது.எனினும், இந்த திட்டங்களில் மாற்றம் செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.
பங்களாதேஷ் நாட்டில் தற்போது ராணுவம் ஆட்சியை கைப்பற்றி, அந்நாட்டு தேசிய அரசியலில் பரபர சூழல் ஏற்பட்டு உள்ளது. மேலும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் மற்றும் வன்முறை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இதன் காரணமாக எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறவிருக்கும் மகளிர் டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் திட்டமிட்டப்படி பங்களாதேஷில் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், வன்முறை சூழ்ந்த பங்களாதேஷில் கள நிலவரத்தை ஐசிசி தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
ஒருவேளை பங்களாதேஷில் மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறாத பட்சத்தில், இதனை இந்தியா நடத்துவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக இன்னும் ஓரிரு வாரங்களில் முடிவு எடுக்கப்பட்டு விடும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
Post a Comment