வாக்காளர் ஒருவருக்கு செலவிடக்கூடிய அதிகபட்ச தொகை – வர்த்தமானி வௌியானது...!


ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒரு இலட்சத்து எண்பத்தாறு கோடி ரூபா இரு இலட்சத்து தொண்ணூற்றெட்டாயிரத்து ஐந்நூற்றி எண்பத்தாறு ரூபாவை பிரச்சார நடவடிக்கைகளுக்காகச் செலவிடலாம் என அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் தேர்தல் பிரச்சாரத்திற்காக ஒரு வாக்காளருக்கு செலவிடக்கூடிய அதிகபட்ச தொகையாக 109 ரூபாவை தேர்தல் ஆணைக்குழு நிர்ணயித்துள்ளது.

வேட்பாளர் ஒருவரின் மொத்த செலவினமாக 186 கோடியே 82 இலட்சத்து 98 ஆயிரத்து 500 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள 40 சதவீதம் வேட்பாளரின் பிரச்சாரப் பணிகளுக்காக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி அல்லது வேறு அரசியல் கட்சியின் செயலாளருக்கோ அல்லது வாக்காளர்களுக்கோ செலவிடலாம் என தேர்தல் ஆணைக்குழு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தல் முடிவுகள் வெளியான 21 நாட்களுக்குள் தேர்தல் பிரசார செலவுகள் உள்ளிட்ட செலவு அறிக்கையை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.

இதனை மீறும் வேட்பாளருக்கு உரிய தேர்தல் சட்டத்தின் கீழ் தண்டனை வழங்க முடியும் என்றும் ஆணையம் சமீபத்தில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post