டாக்கா: முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் இருப்பதால் வங்கதேசம், இந்தியா இடையிலான உறவில் பாதிப்பு இல்லை என்று இடைக்கால அரசின் ஆலோசகர் கருத்துத் தெரிவித்துள்ளார்.
தஞ்சம்:
மாணவர் இயக்கங்களின் போராட்டம் எதிரொலியாக, பிழைத்தால் போதும் என்ற ரீதியில் இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார் ஷேக் ஹசீனா. உயர்மட்ட பாதுகாப்பில் அவர் எங்கே உள்ளார் என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
அமெரிக்கா சதி:
அமெரிக்கா சதி:
அவரின் வெளியேற்றத்துக்கு அமெரிக்காவின் சதியே காரணம் என்று குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படும் சூழலில், ஹசீனா இந்தியாவில் இருப்பதால் அந்நாட்டுடனான உறவில் எந்த பாதிப்பும் இல்லை என்று வங்கதேச இடைக்கால அரசின் வெளியுறவு ஆலோசகர் முகமது தவுஹித் உசேன் தெளிவுபடுத்தி உள்ளார்.
கேள்விக்கு இடமில்லை:
கேள்விக்கு இடமில்லை:
இது குறித்து அவர் கூறி இருப்பதாவது; ஷேக் ஹசீனா தொடர்ந்து இந்தியாவில் தங்கிவிட்டால் என்னவிதமாக சூழல்கள் உருவாகும் என்ற கேள்விக்கு இப்போது இடமில்லை. இருநாடுகளின் உறவில் எந்த பாதிப்பும் இல்லை.
ஆரோக்கியமான சூழல்:
ஆரோக்கியமான சூழல்:
ஒருவர் ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டில் தஞ்சம் அடைந்து விட்டால் இருநாடுகளின் உறவுகளில் பாதிப்பு ஏற்படுமா? என கேட்கிறீர்கள். அது ஒரு கணிக்க முடியாத கேள்வி. எப்போதும் இருநாடுகள் இடையே ஆரோக்கியமான சூழலையும், உறவையும் தொடர முயற்சிக்க வேண்டும் என்பதே எங்கள் எண்ணம்.
ஆதரவு, நட்பு:
ஆதரவு, நட்பு:
சர்வதேச சமூகத்தில் உள்ள அனைத்து நாடுகளும், தற்போதுள்ள இடைக்கால அரசுக்கு உரிய ஆதரவையும், நட்பையும் அளிப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். ஒரு புதிய ஆரம்பத்தை நோக்கி வங்கதேசம் நகர ஆரம்பித்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
Post a Comment