ஜனவரி முதல் ஆசிரியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் - சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு...!


அரச சேவையில் உள்ள சம்பள முரண்பாடுகள் களையப்பட்டு, 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல், அரச ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் 55,000/- ஆக உயர்த்தப்படுமென கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் விழிப்புணர்வு நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அரசாங்கம் தயாரித்துள்ள வரவு செலவுத் திட்டங்களுக்கு ஏற்ப தேவையான ஏற்பாடுகளை வழங்கும் முறைகளின் ஊடாக ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரிக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்

அத்துடன், இந்த சம்பள அதிகரிப்பு நியாயமானது என அரசாங்கம் கூறுவதாகவும் அமைச்சர் வலியுறுத்தினார்.

Post a Comment

Previous Post Next Post