7 பிலிம் ஃபேர் விருதுகளை குவித்த ‘சித்தா’ திரைப்படம்...!


நடிகர் சித்தாரத் நடிப்பில் வெளிவந்த சித்தா திரைப்படம் 7 பிலிம் ஃபேர் விருதுகளை வென்றுள்ளது.

நடிகர் சித்தார்த் நடிப்பில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியான திரைப்படம் சித்தா. பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய அருண்குமார் இந்த படத்தை இயக்கி இருந்தார். இடாகி எண்டர்டெயிண்மெண்ட் நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு திபு தாமஸ் இசையமைத்திருந்தார். சித்தார்த்துடன் இணைந்து நிமிஷா சஜயன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார்.

இத்திரைப்படம் வெளியாகி மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் உச்சத்தை தொட்டது. மேலும் பல விருதுகளையும் பெற்றது. இந்நிலையில் 7 ஃபிலிம் பேர் விருதுகளை சித்தா திரைப்படம் வென்றுள்ளது.

ஹைதராபாத்தில் நேற்று 69 ஆம் ஆண்டு தென் இந்தியாவுக்கான சோபா பிலிம் ஃபேர் விருது வழங்கும் விழா நடைப்பெற்றது. இதில் தென்னிந்திய நடிகர்கள் பங்கேற்றனர். இந்த விழாவில் சித்தா திரைப்படம் மொத்தம் 7 பிலிம் ஃபேர் விருதுகளை வென்றுள்ளது.

சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த குணச்சித்திர நடிகை, சிறந்த பின்னணி பாடகி, சிறந்த இசை, சிறந்த இயக்குநர் ஆகிய பிரிவுகளில் விருதுகளை வென்றுள்ளது. இதனால் படக்குழுழுவினர் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர். தொடர்ந்து படக்குழுவினருக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post