கொட்டுக்காளி படத்தின் 4 நாட்கள் வசூல் விவரம்.. எவ்வளவு தெரியுமா...!


தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் பி.எஸ். வினோத்ராஜ். இவர் இயக்கிய முதல் படம் கூழாங்கல். இப்படத்தை விகேஷ் சிவன் - நயன்தாரா இணைந்து தயாரித்து இருந்தனர்.

உலகளவில் இப்படத்திற்கு அங்கீகாரம் கிடைத்தது. இதை தொடர்ந்து பி.எஸ். வினோத்ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் கொட்டுக்காளி. இப்படத்தில் சூரி மற்றும் அன்னா பென் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் சிவகார்த்திகேயன் இப்படத்தை தயாரித்துள்ளார்.

ரிலீஸுக்கு மும்பே கொட்டுக்காளி படத்திற்கு உலகளவில் பல அங்கீகாரங்கள் கிடைத்தது. கடந்த வாரம் திரைக்கு வந்த கொட்டுக்காளி திரைப்படம் சற்று மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.

வசூல்

இந்த நிலையில் கொட்டுக்காளி திரைப்படம் வெளிவந்து 4 நாட்களை கடந்துள்ள நிலையில், இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் 4 நாட்களில் ரூ. 1.35 கோடி வரை வசூல் செய்துள்ளது என கூறப்படுகிறது.

Post a Comment

Previous Post Next Post