இந்தியன் 2 படம் கடந்த மாதம் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆனது. ஆனால் படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாததால் வசூலும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை.
இந்நிலையில் தற்போது ஓடிடியில் இந்தியன் 2 வெளியாகி இருக்கிறது. படத்தை ஓடிடியில் பார்த்து தற்போது நெட்டிசன்கள் மேலும் ட்ரோல் செய்து வருகின்றனர். இந்தியன் 2 மீம்கள் தான் இப்போது இணையத்தில் ட்ரெண்டிங்.
தள்ளிப்போகும் இந்தியன் 3
இந்தியன் 3 படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகலாம் என முதலில் கூறப்பட்டது. ஆனால் தற்போது கடும் ட்ரோல்களை பார்த்த ஷங்கர் உள்ளிட்ட படக்குழு இந்தியன் 3ல் சில மாற்றங்கள் செய்து தேவைப்பட்டால் ரீஷூட் செய்யவும் இருப்பதாக தெரிகிறது.
ஷங்கர் தற்போது தெலுங்கில் ராம் சரண் நடிக்கும் கேம் சேஞ்சர் படத்தினை இயக்கி வருகிறார். அதன் பணிகளை முடித்து இந்த வருட இறுதியில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள். அதற்கு பிறகு தான் ஷங்கர் இந்தியன் 3ம் பாகம் பக்கம் வர வாய்ப்பிருக்கிறதாம்.
அதனால் இந்தியன் 3 படம் அடுத்த வருடம் தாமதமாக கோடை விடுமுறைக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Post a Comment