அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் பயணித்த சொகுசு ஜீப் இன்று (13) பிற்பகல் கருவலகஸ்வெவ பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக கருவலகஸ்வெவ பொலிஸார் தெரிவித்தனர்.
ரிஷாட் எம்.பி தனது மெய்ப்பாதுகாவலர்களுடன் மன்னாரிலிருந்து புத்தளம் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது கருவலகஸ்வெவ எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக வீதியின் குறுக்கே வந்த மோட்டார் சைக்கிளில் மோதாமல் இருக்க முயன்ற போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வாகனத்தில் பயணித்த பாராளுமன்ற உறுப்பினருக்கோ அல்லது வேறு எவருக்கோ காயம் ஏற்படவில்லை எனவும் மோட்டார் சைக்கிளில் பயணித்தவருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த வாகனத்தை சாரதி கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகி அருகில் உள்ள பள்ளத்தில் நிறுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை புத்தளம் ஆரம்ப வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்க கருவலகஸ்வெவ பொலிஸார் ஏற்பாடு செய்திருந்தனர்.
Post a Comment