குறித்த விடயத்தினை தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் ஒழிப்பு திட்டம் தெரிவித்துள்ளது.
இதேவேளை இந்த நோயால் பாதிக்கப்பட்ட வயோதிபர்களின் எண்ணிக்கை 3,169 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய பாலியல் நோய் விசேட வைத்திய நிபுணர் வினோ தர்மகுலசிங்க தெரிவித்தார்.
அத்துடன் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2022இல் 607 ஆகவும், 2023இல் 694 ஆகவும் பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது 14 சதவீதம் அதிகமாகும் எனவும், இந்த 694 நோயாளிகளில் 613 பேர் ஆண்கள் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கிடையில், 15 முதல் 24 வயதுக்குட்பட்ட பதின்ம வயதினரிடையே எயிட்ஸ் பரவுவது அதிகரித்து வருவதாக விசேட வைத்திய நிபுணர் வினோ தர்மகுலசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment