எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமது ஆதரவு சஜித் பிரேமதாசவுக்கு (sajith premadasa) வழங்கவுள்ளதாக முஸ்லிம் காங்கிரஸ் திருகோணமலை (Trincomalee) மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தௌபீக் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்கனவே ஐக்கிய மக்கள் சக்தியுடன் செயற்பட்டு வருவதாகவும், தாம் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் தமது கட்சியின் உயர்பீடத்தில் இறுதித் தீர்மானம் எட்டப்படாத போதிலும், உச்ச சபை எதிர்க்கட்சித் தலைவருக்கே ஆதரவு வழங்குவதாகவும் தேசிய அமைப்பாளர் தெரிவித்துள்ளார்
கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம்(rauf hakeem) உள்ளிட்டோர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் ஏற்கனவே இணைந்து செயற்பட்டுள்ளதால், சஜித் பிரேமதாசவுக்கு உச்ச சபையின் ஆதரவு கிடைக்கும் என தேசிய அமைப்பாளர் எம்.எஸ்.தௌபீக் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
.
Post a Comment