முதல் வேட்பாளராக கட்டுப்பணம் செலுத்தினார் சஜித்...!


ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் சார்பில் இன்று காலை கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

அக்கட்சியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் குழுவினர் சென்று பிணைப் பணத்தை வைப்பிலிட்டனர்.

முன்னதாக எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்திருந்த நிலையில், ஓகஸ்ட் 14 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை கட்டுப்பணம் செலுத்த முடியும் எனவும், 15 ஆம் திகதி முதல் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து சுயேட்சை வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ரணில் விக்கிரமசிங்க, முதல் ஆளாக கட்டுப்பணம் செலுத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post