அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் ஃபாசில், பிரகாஷ் ராஜ் உட்பட பலர் நடிப்பில் உருவாகும் படம், ‘புஷ்பா 2’. சுகுமார் இயக்கும் இந்தப் படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்தப் படம் ஆக.15-ல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால் படப்பிடிப்பு பணிகள் இன்னும் முடிவடையாததால் ரிலீஸ் தள்ளிப் போகும் என்று கூறப்பட்டது. அதன்படி இந்தப் படத்தின் ரிலீஸை டிச.6-ம் திகதிக்கு மைத்ரி மூவி மேக்கர்ஸ் தள்ளி வைத்துள்ளது.
அதே திகதியில் ராஷ்மிகா மந்தனா, விக்கி கவுசலுடன் நடித்துள்ள இந்திப் படமான ‘சாவ்வா’வும் (Chhava) வெளியாகிறது. ஒரே நாளில் ராஷ்மிகா நடித்துள்ள 2 படங்கள் வெளியாவது அவர் ரசிகர்களை குஷிப்படுத்தி இருக்கிறது.
Post a Comment