22 ஜூலை இலங்கை வரவுள்ள இந்திய அணி...!


இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான டி20, ஒருநாள் தொடர்களுக்கான போட்டி அட்டவணையை இலங்கை கிரிக்கெட் வெளியிட்டுள்ளது.

போட்டித் தொடர்களில் பங்கேற்கவுள்ள இந்திய அணி எதிர்வரும் 22ஆம் திகதி இலங்கை வரத் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 போட்டிகள் அனைத்தும் கண்டி – பல்லேகலை சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 26ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி ஒகஸ்ட் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

Post a Comment

Previous Post Next Post