நாட்டின் பல பகுதிகளில் மின்சார விநியோகத்தை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போது நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
அதன்படி காலி, களுத்துறை, இரத்தினபுரி, கொழும்பு மற்றும் கேகாலை போன்ற பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மின்சாரத்தை துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் சுலக்ஷா ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
வெள்ள நிலைமை காரணமாக மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் அந்த பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்
Post a Comment