- அமைச்சருடனான கலந்துரையாடலின் பின் தீர்மானம்-
போக்குவரத்து அமைச்சருடனான கலந்துரையாடலின் பின்னர், வேலை நிறுத்தத்தை கைவிட ரயில்வே தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள ரயில் ஊழியர்களுக்கும் அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று போக்குவரத்து அமைச்சில் இன்று (10) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ரயில் சாரதிகளின் குற்றச்சாட்டுகளுக்கு ஊடகவியலாளர் சந்திப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் பொதுமக்களுக்கும், அரசாங்கத்துக்கும் அசௌகரியத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்த பணிப்புறக்கணிப்பு வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்டதாக ரயில்வே திணைக்களத்தின் மேலதிக பொது முகாமையாளர் (நிர்வாகம்) திருமதி குசலானி டி சில்வா தெரிவித்தார்.
மேலும், இதுபோன்ற செயலில் ஈடுபட்டவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
நன்றி...
தினகரன்
Post a Comment