நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 161 டெங்கு நோயாளர் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த 20 நாட்களில் 2,044 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இதேவேளை, மே மாதத்தில் 2,647 டெங்கு நோயாளர் பதிவாகியுள்ளனர்.
2024இன், இதுவரையான காலப்பகுதியில் 26,964 நோயாளிகள் பதிவாகியுள்ளனர். அவர்களில், அதிகளவான நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வருடத்தில் இதுவரை டெங்கு நோயினால் 09 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பதிவாகியுள்ளது.
Post a Comment