தொழிலாளர்களைக் கட்டாய உழைப்புக்கு உட்படுத்தி உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் இறக்குமதி, ஏற்றுமதி மற்றும் விற்பனையை நிறுத்துவதற்கு ஐரோப்பிய பாராளுமன்றம் அங்கீகாரம் அளித்துள்ளது.
விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ள இவ்விதிமுறைக்கு ஆதரவாக 555 வாக்குகளும் எதிராக 05 வாக்குகளும் கிடைத்துள்ளன.
இது தொடர்பில் அந்த ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில், உலகின் எந்தவொரு நாட்டுக்கும் பொருந்தும் வகையிலான இவ்விதிமுறையின் படி, தொழிலாளர்களைக் கட்டாய உழைப்புக்கு உட்படுத்தி உற்பத்தி செய்யப்படும் அல்லது தயாரிக்கப்படும் பொருட்களின் விற்பனை, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிறுத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Post a Comment