முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்கு உத்தியோகபூர்வ இணையத்தளம் www.muslimaffairs.gov.lk நேற்று(10) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
புத்தசாசன மத மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க பிரதம அதிதியாக கலந்து கொண்டு இணையத்தளத்தை உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.
முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் நீண்ட காலத் தேவையாக காணப்பட்ட இந்த இணையத்தளத்தை முஸ்லிம் திணைக்களத்தின் பணிப்பாளர் இஸட்.ஏ.எம். பைசல் முயற்சியினால் உருவாக்க முடிந்ததுடன் உதவிப் பணிப்பாளர்களான எம்.எஸ். அலா அஹமட், என். நிலூபர், கணக்காளர் நிப்றாஸ் ஆகியோரும் இதற்கு உறுதுணையாக இருந்து செயற்பட்டார்கள்.
இந்தப் புதிய இணையதளத்தின் மூலமாக பள்ளிவாசல்கள் , ஸியாரங்கள், அரபுக் கல்லூரிகள், குர்ஆன் மத்ரஸாக்கள், அஹதிய்யா பாடசாலைகள் ஹஜ், உம்ரா, வீசா சம்பந்தமான தகவல்கள் மற்றும் சேவைகளை இலகுவாக பெற்றுக்கொள்ள முடியும்.
அமைச்சின் கீழுள்ள அனைத்து திணைக்களத்தையும் கணனி மயப்படுத்தி நவீனமயப்படுத்த வேண்டும் எனும் அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவின் எண்ணக்கருவின் அடிப்படையில் இந்த இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
Post a Comment