பமுனுகம (Pamunugama) காவல்துறை பிரிவிற்குட்பட்ட கடற்கரை பகுதியில் கரையொதுங்கிய நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இந்த சடலமானது நேற்று (24) பமுனுகம - சூரியமல்வத்த பிரதேசத்தில் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், உயிரிழந்தவர் தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை கண்டறியப்படாததுடன் இவர் 35 முதல் 40 வயதுக்குட்பட்டவர் என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
உயிரிழந்தவரது சடலம் கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பமுனுகம காவல்துறையினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment