றோல்ஸுக்குள் 4 அங்குல துருப்பிடித்த கம்பி...!




யாழ்ப்பாணம், மருதனார்மடம் பகுதியில் உள்ள கடையொன்றில் வாங்கிய றோல்ஸ் ஒன்றினுள் துருப்பிடித்த கம்பித் துண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

ஒருவர் குறித்த கடையில் ரூ. 80 வீதம் 10 றோல்ஸ்களை கொள்வனவு செய்து, தனது உறவினர் வீட்டுக்கு கொண்டு சென்றுள்ளார்.

அங்கு றோல்ஸ்களை பரிமாறி சாப்பிட்ட வேளை அதில் ஒன்றினுள் சுமார் 4 அங்குல அளவு நீளமுடைய கம்பித் துண்டு காணப்பட்டுள்ளது.

இதனையடுத்து இது தொடர்பில் சுகாதார பரிசோதகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த றோல்ஸ்களை கொள்வனவு செய்த கடைக்கு, சுன்னாகம் பகுதியில் உள்ள பிரபல பேக்கரி ஒன்றிலிருந்தே அவை விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த பேக்கரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post