ஆசிரியர் வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பு இன்று முதல் ஆரம்பம்...!



தேசிய பாடசாலைகளில் தமிழ், சிங்கள மற்றும் ஆங்கில மொழி ஆசிரியர் வெற்றிடங்களுக்கான பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகப்பரீட்சை இன்று (29) முதல் ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் 02 ஆம் திகதி இடம்பெற்ற போட்டிப் பரீட்சை பெறுபேறுகளின் பிரகாரம் தேசிய பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

அதன்படி, இலங்கை ஆசிரியர் சேவையின் 3-1 (அ) தரத்தில் ஆட்சேர்ப்பு செய்யப்படவுள்ளனர்.

இது தொடர்பான நேர்முகத்தேர்வுகள் எதிர்வரும் மே மாதம் 9ஆம் திகதி வரை இசுருபாய கல்வி அமைச்சில் நடைபெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, பொருளாதார நெருக்கடியால் வீழ்ச்சியடைந்துள்ள மாணவர்களின் கல்வியை மீட்டெடுக்க அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நன்றி...
தினகரன்

Post a Comment

Previous Post Next Post