டுபாயில் உருவாகும் உலகின் மிகப்பெரிய விமான நிலையம்...!

உலகிலேயே மிகப்பெரிய விமான நிலையம் டுபாயில் அமைக்கப்படவுள்ளதாக அந்த நாட்டு ஆட்சியாளர் ஷேக் முகமத் தெரிவித்துள்ளார்.

டுபாயில் தற்போது உள்ள சர்வதேச விமான நிலையத்தை மறுசீரமைக்கும் நடவடிக்கைகான புதிய திட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, விமான நிலையத்தில் புதிய முனையமொன்று அமைக்கப்படுமெனவும் ஷேக் முகமது தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் தளத்தில் கூறியுள்ளார்.

35 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பில் இந்த விமான நிலையம் கட்டப்பட உள்ளது. புதிய விமான நிலையம் தற்போது உள்ள சர்வதேச விமான நிலையத்தை விட 5 மடங்கு பெரியதாக இருக்கும் என தெரிவிக்கப்படவுள்ளது.

இந்த விமான நிலையத்தில் 400 வாயில்கள் மற்றும் 5 ஓடுபாதைகளும் அமைய உள்ளது. சுமார் 260 மில்லியன் பயணிகளை உள்ளடக்கும் வகையில் உலகின் மிகப்பெரிய திறன் கொண்ட விமான நிலையமாக இது இருக்கும் என தெரிவிக்கப்படவுள்ளது.

மேலும், விமான நிலையத்தை சுற்றி ஒரு முழு நகரம் கட்டப்படும். இந்த புதிய விமான நிலையம் அல்மக்தூம் சர்வதேச விமான நிலையம் என்று அழைக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post