சீனாவில் உள்ள ஒரு வணிக நிறுவனம், ஆரோக்கியமான வேலை-வாழ்க்கை சமநிலையை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டு, ஊழியர்களுக்கு ‘மகிழ்ச்சியற்ற விடுப்பு’ என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தப் பிரிவில் உள்ள ஊழியர்களுக்கு ஓரிரு நாட்கள் மட்டும் அல்லாமல் 10 நாட்கள் விடுமுறை அளித்துள்ளது குறித்த நிறுவனம்.
எல்லோருக்கும் மகிழ்ச்சியற்ற நேரங்கள் இருக்கும், அதனால் நீங்கள் மகிழ்ச்சியாக இல்லை என்றால் வேலைக்கு வர வேண்டாம். இந்த மாற்றம் ஊழியர்கள் தங்கள் ஓய்வு நேரத்தை தீர்மானிக்க உதவுகிறது. “நிர்வாகம் இந்த விடுமுறையை மறுக்க முடியாது,” என நிறுவனம் அறிவித்துள்ளது.
யூ டோங்லாய் நிறுவனத்தில், ஊழியர்கள் ஒரு நாளைக்கு ஏழு மணி நேரம் வேலை செய்ய வேண்டும். வார இறுதி நாட்கள் விடுமுறை. இதனுடன், ஊழியர்களுக்கு 30 முதல் 40 நாட்கள் வருடாந்திர விடுப்புக்கு உரிமை உண்டு.
நிறுவனத்தின் ஊழியர்களின் நலன் முதன்மையானது என்றும் அவர்கள் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே நிறுவனம் சிறப்பாக முன்னேற முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
Post a Comment