இலங்கை தர நிர்ணய நிறுவனத்திற்கும் சீனாவின் தரப்படுத்தல் நிர்வாகத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திட அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான சுங்கவரியற்ற வர்த்தகத்தில் எழும் தொழில்நுட்ப தடைகளை குறைப்பதற்காக இலங்கை தர நிர்ணய நிறுவனம் மற்றும் சீனாவின் தரப்படுத்தல் நிர்வாகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட முன்மொழியப்பட்டுள்ளது.
இது தொடர்பான வரைவு புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கான சட்டமா அதிபரின் அனுமதியும் வெளிவிவகார அமைச்சின் இணக்கமும் கிடைத்துள்ளதாக அரசாங்கம் கூறுகிறது.
Post a Comment