யுனைடட் யூத் இளைஞர் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த “இளைஞர் எமது எதிர்காலம்” என்ற சிநேகபூர்வ சந்திப்பு நேற்று (12) தப்ரபேன் எண்டர்டைன்மண்டில் நடைபெற்றது.
இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம், இந்த ஆண்டு தனியார் வாகனங்களின் இறக்குமதியை தளர்த்துவதில் கவனம் செலுத்துவீர்களா? என்று கேள்வி கேட்கப்பட்டது.
அடுத்த ஆண்டு முதல் அதனை படிப்படியாக செயல்படுத்த எதிர்பார்க்கிறோம். வாகன சந்தையில் உள்ள பிரச்சினைகளை நான் அறிவேன். ஆனால் இன்னும் எங்களின் கையிருப்புத் தொகை நல்ல நிலையில் இல்லை. வாகனங்கள் இறக்குமதியைத் தவிர மற்ற அனைத்திற்கும் அனுமதி அளித்துள்ளோம்.
இந்த நிலைமையில், வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டால், நாடு பின்னோக்கிச் செல்லும் வாய்ப்பு உள்ளது. ஆனால் அடுத்த ஆண்டு முதல் அத்தியாவசிய வாகனங்களை படிப்படியாக இறக்குமதி செய்ய எதிர்பார்க்கிறோம். இந்த ஆண்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகளை இறக்குமதி செய்ய அனுமதித்துள்ளோம் என ஜனாதிபதி இவ்வாறு பதிலளித்துள்ளார்.
Post a Comment