முதன்முறையாக மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் பங்கேற்கும் சவுதி அரேபியா...!!



அழகிகளை தேர்வு செய்ய உலகளவில் பல்வேறு போட்டிகள் நடைபெறுகின்றன. அந்த வகையில் மிக உயரிய அழகி போட்டியாக இருக்கும் மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டியில் முதன்முறையாக சவுதி அரேபியா நாட்டின் அழகி பங்கேற்கவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இஸ்லாமிய நாடான சவுதி அரேபியா, பெண்களுக்கு என்று தனி கட்டுபாடுகளை கொண்டுள்ளது. தங்களுக்கு என்று தனித்துவமான கலாச்சாரத்தை பின்பற்றி வருகின்றனர். அதன் அடிப்படையிலேயே அங்கு ஆட்சி முறையும் அமைந்துள்ளது.

சமீப காலமாக இளவரசர் முகமது பின் சல்மான் அல் சவுத் தலைமையிலான ஆட்சியில், பெண்களுக்கான உரிமைகளில் தளர்வு ஏற்படுத்தப்படுகிறது. பெண்களுக்கு சாரதி அனுமதிபத்திரம் உரிமை, ஆண்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் பெண்கள் கலந்துகொள்ள அனுமதி போன்றவை அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில், தற்போது மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் சவுதி அரேபியா சார்பாக 27 வயதான மாடல் ரூமி அல்கஹ்தானி (Rumy Alqahtani) கலந்துகொள்கிறார்.

மேலும், சமீபத்தில் மிஸ் மற்றும் மிஸ்சஸ் கோபல் ஏசியன் அழகி போட்டி (Miss and Mrs Global Asian), மிஸ் ஏசியா இண்டர்நேஷனல் அழகி போட்டி (Miss Asia international) ஆகியவற்றில் சவுதி அரேபியா சார்பில் கலந்துகொண்டதாக தெரிவிக்கின்றன.

நன்றி...
Daily-Ceylon

Post a Comment

Previous Post Next Post