இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு தடை...!!



அதிமுக கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

திமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர்பேடு போன்றவற்றை பயன்படுத்த தடை விதிக்க கோரி அக் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில், அதிமுக சின்னம், பெயர், கொடி உள்ளிட்டவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு விதித்த நிரந்தர தடையை உறுதி செய்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post