தகுதியானவர்கள் பாராளுமன்றம் வரவேண்டும் – அதனால் முதலில் பாராளுமன்றத் தேர்தல் வேண்டும்...!



தகுதியானவர்கள் பாராளுமன்றம் வரவேண்டும் எனவும் அதனால் முதலில் பாராளுமன்றத் தேர்தல் வேண்டும் எனவும் இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் வைத்தே இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

முதலில் ஜனாதிபதி தேர்தலை வைத்தால் 03 வேட்பாளர்கள் இருந்தால் அவர்களில் யாரும் 50 வீதத்துக்கு மேல் எடுக்கவில்லை என்றால் இரண்டாவது வாக்கெண்ணும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும். அது பாதிப்பான ஒரு விடயம். அதில் 48 வீதம் எடுத்தவர் கூட தோல்வியடைய முடியும். எனவே 48 வீத மக்களின் விருப்பம் இல்லாமல் ஆகும்.

எனவே முதலில் பாராளுமன்ற தேர்தலை வைத்தால் மக்கள் தங்களுக்கு விருப்பமானவர்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்புவார்கள். அதில் கூடிய ஆசனங்களை பெறக்கூடிய கட்சி ஜனாதிபதியொருவரை நிலை நிறுத்த இலகுவாக இருக்கும்.

அப்படி செய்தால்தான் பாராளுமன்றத்திலும் பெரும்பான்மை இல்லாத நிலை. அல்லது தகுதியற்றவர்கள் நாடாளுமன்றம் வருவது போன்ற விடயங்கள் நிறுத்தப்படும்.

மக்கள் விரும்புகின்றவர்கள் பாராளுமன்றத்துக்கு வரும் பொழுது ஜனாதிபதியும் ஒரு தலைப்பட்சமாக இருக்காமல் பாராளுமன்றத்தோடு பின்னிப்பிணைந்து செயலாற்றும் சந்தர்ப்பம் உருவாகும்.

Post a Comment

Previous Post Next Post