காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் பல பகுதிகளை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் ஒரே குடும்பதைச் சேரந்த 36 பேர் உட்பட குறைந்தது 80 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.
காசா நகரில் அல்-ஷிஃபா மருத்துவ வளாகத்திற்கு அருகே இடம்பெயர்ந்த மக்கள் வசிக்கும் ஏழு மாடி குடியிருப்பு கட்டிடத்தின் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் பல ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளன. இதில் பலர் உயிரிழந்ததுடன் மற்றும் பலர் காயமடைந்தனர் என அதிகாரபூர்வ பலஸ்தீனிய செய்தி நிறுவனமான WAFA தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், காசா நகரில் அல்-ஜலா தெருவில் உள்ள குடியிருப்பு மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் வான்வழித் தாக்குதல் நடத்தின. இதில் டசின் கணக்கானோர் உயிரிழந்தனர். காசா நகரில் அல்-துஃபா சுற்றுப்புறத்தில் உள்ள ஒரு வீட்டை குறிவைத்து இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் ஐந்து பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் டசின் கணக்கானவர்கள் காயமடைந்தனர்.
மேலும், இஸ்ரேலிய இராணுவத்தின் பீரங்கி மத்திய காசாவில் உள்ள நுசிராத் முகாமில் இரண்டு வீடுகளை குறிவைத்தது, இதன் விளைவாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த குறைந்தது 36 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர்.
தெற்கு காசாவில் உள்ள ரஃபா நகரில், மக்கள் வசிக்கும் வீட்டின் மீது குண்டுவீசித் தாக்கியதில், ஏராளமான பொதுமக்கள் காயமடைந்தனர்.
காசாவின் சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, ஒக்டோபர் 7 ஆம் திகதி தொடங்கி காஸாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் 31,490 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 73,439 பேர் காயமடைந்துள்ளனர்.
Post a Comment