IMF குழு மார்ச் 7ஆம் திகதி இலங்கைக்கு...!

சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று எதிர்வரும் மார்ச் மாதம் 7ஆம் திகதி விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் இரண்டாவது மீளாய்வு மேற்கொள்ள இலங்கை வரவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் சுமார் இரண்டு வாரங்களில் இரண்டாவது மதிப்பாய்வை முன்னெடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post