ஆப்பிளை இந்த மாதிரியெல்லாம் சாப்பிட்டா உடல் எடை வேகமாக குறையுமாம்... டிரை பண்ணி பாருங்க...!


ஆப்பிள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் பிடித்த பழம். தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரையே பார்க்க வேண்டிய தேவை இருக்காது என்றெல்லாம் படித்திருப்போம். ஆனாலும் தினமும் ஆப்பிள் கொடுத்தால் சாப்பிட பிடிக்காது. அதே ஆப்பிளை நமக்கு பிடித்த விதங்களில் சுவையான வகையில் சாப்பிட்டால் அதன் பலனும் கிடைக்கும். எடையைக் குறைக்கவும் அது உதவியாக இருக்கும்.

​ஸ்நாக்ஸாக



எடை அதிகரிக்கப்பதை தவிர்ப்பதற்கும் உடல் எடையைக் குறைப்பதற்கும் ஆப்பிளை நீங்கள் ஸ்நாக்ஸ் நேரத்தில் எடுத்துக் கொள்வது பெஸ்ட் சாய்ஸாக இருக்கும்.

வழக்கமான புராசஸ்டு உணவுகள், ஜங்க் வகைகள், சிப்ஸ் வகைகள் அல்லது இனிப்புகள் ஆகியவற்றை எடுத்துக் கொள்வதற்கு பதிலாக, அந்த நேரத்தில் ஆப்பிள் சாப்பிட்டால் ஜங்க் உணவை தவிர்த்தது போலவும் ஆகிவிடும். உடல் எடையும் குறையும்.

இதில் கலோரிகளும் குறைவு. நார்ச்சத்து இருப்பதால் வயிறும் நிறைந்துவிடும்.
​நார்ச்சத்தை அதிகரிப்பது



கலோரிகளை கட்டுப்படுத்துவது, ஜீரணத்தை மேம்படுத்த, மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்சினைகளை தடுக்க, உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்க என எல்லா விதங்களிலும் நார்ச்சத்து நம்முடைய உடலுக்கு மிக மிக அவசியம்.
உணவில் நார்ச்சத்து விகிதத்தை அதிகப்படுத்தவும் கலோரிகளின் அளவைக் குறைக்கவும் ஆப்பிளை தினசரி சாப்பிடலாம். இதிலுள்ள அதிகப்படியான நார்ச்சத்துக்கள் உணவு சாப்பிட்ட திருப்தியைக் கொடுக்கும். கலோரியும் குறையும்.

உணவுக்கு முன்பாக



உங்களுடைய வழக்கமான உணவுக்கு அரை மணி நேரம் முன்பாக ஆப்பிளை எடுத்துக் கொள்வதும் மிகச்சிறந்த வழி. அப்படி எடுத்துக் கொள்ளும்போது பசியைக் கட்டுப்படுத்த முடியும்.
உணவு நேரத்தில் அதிகமான உணவு எடுத்துக் கொள்வது, வயிறு முட்ட சாப்பிடுவதையும் இதன்மூலம் தவிர்க்க முடியும்.

​சாப்பிடும் அளவை குறைக்க



வழக்கமாக நீங்கள் எடுத்துக் கொள்ளும் உணவின் அளவை (கலோரியை) கட்டுப்படுத்தினால் மட்டும் தான் உடல் எடை இழப்பு என்பதே சாத்தியமாகும். அந்த அளவைக் குறைப்பதற்கு ஆபு்பிள் உங்களுக்கு உதவி செய்யும்.

அதற்கு ஆபு்பிளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு பௌலில் வைத்துக் கொண்டு அவ்வப்போது அதை ஸ்நாக் போல கொரிக்கலாம். அது அதிக பசியைக் கட்டுப்படுத்தும். மனசும் நாம் கொரித்துக் கொண்டிருக்கிறோம் என்கிற திருப்தியை அடையும்.

​விதவிதமாக சாப்பிடலாம்



ஆப்பிளை எப்போதும் ஒரே மாதிரி சாப்பிட்டால் தான் உங்களுக்கு போரடிக்கும். எரிச்சலாக இருக்கும். அதை கொஞ்சம் சுவாரஸ்யமான முறையில் செய்து எடுத்துக் கொள்ளுங்கள். விரும்பி சாப்பிட ஆரம்பித்து விடுவீர்கள். உங்களுடைய கிரியேட்டிவிட்டியும் அதிகமாகிவிடும்.
ஆப்பிளை சிறு துண்டுகளாக நறுக்கி யோகர்ட்டுடன் சேர்த்து சாப்பிடலாம். ஓட்மீலில் கலந்து சாப்பிடலாம். ஸ்மூத்தியாக எடுத்துக் கொள்ளலாம்.

​இனிப்புகளுக்கு பதிலாக



நீங்கள் ஸ்வீட்டை விரும்பி சாப்பிடுகிறவராக இருந்தால், உடல் எடையைக் குறைக்க வேண்டுமென்று நினைத்தால் முதலில் நீங்கள் நிறுத்த வேண்டியது சர்க்கரை உள்ளிட்ட இனிப்புகளை தான்.

ஆனாலும் இனிப்பு சாப்பிட வேண்டுமென்று தோன்றுகிறது என்றால் அதற்கு நீங்கள் சர்க்கரை போன்ற ஸ்வீட்னர்களுக்கு பதிலாக ஆப்பிளை மெல்லிய இனிப்புக்காக சேர்க்கலாம். கேக், அல்வா போன்றவற்றில் சர்க்கரைக்கு பதிலாக ஆப்பிளை சேர்க்கலாம்.


​நீர்ச்சத்தை அதிகரிக்க



ஆப்பிளில் தண்ணீர் சத்து அதிகமாகவே இருக்கிறது. இதை சாப்பிடும்போது உடல் நீண்ட நேரத்துக்கு நீர்ச்சத்துடன் இருக்கும்.

உடலை நன்கு நீர்ச்சத்துடன் வைத்திருப்பதும் கூட உடல் எடையை சீராக நிர்வகிப்பதற்கு முக்கியமான ஒன்று.


​மைண்ட்ஃபுல் ஈட்டிங்



உங்களுடைய ஆப்பிளை நிதானமாக, மெதுவாக ரசித்து சாப்பிடுங்கள்.

அதன் சுவையை உமிழ்நீரோடு கலந்து சுவைத்து சாப்பிடும்போது உடலின் ஜீரண ஆற்றலும் மேம்படும். அதிகமாக உணவு எடுப்பதையும் தவிர்க்க முடியும்.

இவை எல்லாமே உடல் எடையைக் குறைக்கவும் நிர்வகிக்கவும் பெரும் உதவி செய்யும்.


​புரதத்துடன் சேர்த்து



ஆப்பிளை எப்போதும் தனியாக சாப்பிடப் பிடிக்கவில்லை என்றால், அதை சில புரத உணவுகளோடு சேர்த்துச் சாப்பிடுங்கள்.

உதாரணத்துக்க ஆபு்பிளை நட்ஸ், பீநட் பட்டர், சீஸ் போன்றவற்றுடன் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம். இப்படி சாப்பிடும்போது திருப்பதியும் மன நிறைவும் கிடைக்கும்.

நன்றி...
சமயம்-தமிழ்

Post a Comment

Previous Post Next Post