ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அனைத்தையும் இழக்கவேண்டும் என உக்ரைன் ஜனாதிபதி வொளொடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஸ்யா படையெடுத்து இரண்டுவருடங்களாவதை குறிக்கும் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக உக்ரைன் தலைநகருக்கு சென்ற மேற்குலக தலைவர்களை வரவேற்று உரையாற்றும்போதே உக்ரைன் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
இத்தாலி கனடா பெல்ஜியம் தலைவர்கள் உக்ரைன் தலைநகருக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவரும் உக்ரைன் தலைநகருக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
உக்ரைன் தலைநகருக்கு அருகில் உள்ள ஹொஸ்டமொல் விமானநிலையத்தி;ற்கு மேற்குலக தலைவர்கள் சென்றுள்ளனர்.
உக்ரைன் தலைநகரை கைப்பற்றும் நோக்கத்துடன் ரஸ்யாவின் பரசூட் பிரிவினர் கைப்பற்றிய இந்த விமானநிலையத்தை பின்னர் உக்ரைன் படைப்பிரிவினர் கைப்பற்றினர்.
இரண்டு வருடங்களின் பின்னர் இங்கு எதிரிகளின் துப்பாக்கி சூட்டினை சந்தி;த்தோம் தற்போது இரண்டு வருடங்களின் பின்னர் நண்பர்களை சந்திக்கின்றோம் என உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
எந்த மனிதனும் போர் முடிவிற்கு வரவேண்டும் என விரும்புவான் ஆனால் நாங்கள் எவரும் எங்கள் உக்ரைன் முடிவி;ற்கு வருவதை அனுமதிக்கமாட்டோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment