ரயில்வே திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு...!


நாளை (04) கரையோரப் பாதையில் இயங்கும் ரயில்களை, பிரதான நிலையங்களில் நிறுத்தாமல் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

76 ஆவது தேசிய சுதந்திர தின விழாவை, கொழும்பு காலிமுகத்திடலில் ஜனாதிபதி, பிரதமர், உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பிரமுகர்களின் பங்குபற்றுதலுடன் நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், கொள்ளுப்பிட்டி மற்றும் பம்பலப்பிட்டி ரயில் நிலையங்களில் நாளை காலை 05.00 மணி முதல் காலை 09.00 மணி வரை ரயில்கள் நிற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர விழாவில் பங்கேற்கும் முக்கியஸ்தர்கள் மற்றும் அணிவகுப்பில் பங்கேற்கும் முப்படையினர் மற்றும் பொலிஸாரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ரயில்களை நிறுத்தாமல் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Post a Comment

Previous Post Next Post