சுற்றுலா ஆப்கானிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணியின் வெற்றிக்கு உறுதுணையாக களமிறங்கிய மதீஷ பத்திரன 4 ஓவர்களில் 24 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
குறிப்பாக ஆட்டத்தின் 19வது ஓவர் ஆட்டத்தையே மாற்றியது எனலாம்.
இருப்பினும், உலகக் கிண்ணத்தில் மதீஷ திறமையாளர்களுக்குள் இருக்க முடியவில்லை, இதனால் அவர் அணியில் தனது இடத்தை இழந்தார்.
அப்போது, மலிங்க தனது சமூக வலைத்தள கணக்குகள் மூலம் பதிவு ஒன்றை வெளியிட்டு, “மதீஷ நான் உன்னுடன் இருக்கிறேன். நான் உன்னை நம்புகிறேன்” என அவர் கடந்த 11 ஒக்டோபர் 2023 அன்று தெரிவித்திருந்தார்.
மலிங்கவின் நம்பிக்கையை நியாயப்படுத்திய மதீஷ, ஐந்து மாதங்களுக்குப் பிறகு இலங்கைக்கு சிறப்பான திறமைகளை வெளிப்படுத்தி வெற்றியை பெற்று தந்தார்.
நேற்றைய போட்டிக்குப் பிறகு, மலிங்க தனது சமூக வலைதள கணக்குகளில், “மதீஷ நான் இன்னும் உன்னை நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.
Post a Comment