திலகரத்ன டில்ஷானுக்கு அவுஸ்திரேலிய குடியுரிமை..!


இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் திலகரத்ன டில்ஷான் அவுஸ்திரேலிய குடியுரிமை பெற்றுள்ளார்.

அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஜேசன் வுட் (Jason Wood) தனது உத்தியோகபூர்வ முகநூல் கணக்கில் பதிவிட்டுள்ள பதிவில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக குடியுரிமை வழங்கும் விழா, மேலும் சிறப்பு வாய்ந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜேசன் வூட் அந்த குறிப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், தில்ஷான் எதிர்காலத்தில் நாட்டின் கிரிக்கெட்டுக்கு சிறப்பான பங்களிப்பை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, தில்ஷானின் மகள் ரெசாந்தியையும் குறிப்பிட்டு, அவரது கிரிக்கெட் எதிர்காலத்திற்கு வாழ்த்து தெரிவித்தார்.

Post a Comment

Previous Post Next Post