மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்கான காரணம் வெளியானது...!



2024 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் பணவீக்க வீதத்தை 5% ஆகக் கொண்டுவருவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

70% முதல் 6% வரை அதிகரித்துள்ள பணவீக்க வீதத்தை இன்று குறைக்க அரசாங்கத்தினால் முடிந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்று (20) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு மில்லியன் டாலராக குறைந்திருந்த அன்னிய கையிருப்பு தற்போது 4.7 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறினார்.

இதேவேளை, மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், அந்தந்த பதவிகளில் தக்கவைத்துக்கொள்ளும் நோக்கில் மாற்று இல்லாத சில பதவிகளுக்கு இவ்வாறு சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

2022-23 ஆம் ஆண்டில் 99 மத்திய வங்கி அதிகாரிகள் அல்லது 10% ஊழியர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டிய அவர், கூட்டு ஒப்பந்தங்களின்படி, ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கும் ஒரே மாதிரியான சம்பள உயர்வுக்கு அவர்களுக்கு உரிமை உண்டு என்று கூறினார்.

அன்றைய சம்பளத்திற்கான பணம் மத்திய வங்கிக் கணக்கிலிருந்து வழங்கப்படும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நன்றி...
Daily-Ceylon

Post a Comment

Previous Post Next Post