நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ கிராம் முருங்கைக்காயின் சில்லறை விலை நேற்று 2000 ரூபாவாக அதிகரித்துள்ளது.
அந்த பொருளாதார நிலையத்தில் ஒரு கிலோ முருங்கைக்காயின் மொத்த விலை 1980 ரூபாவாக பதிவாகியிருந்தது.
நாட்டில் உள்ள வேறு எந்த ஒரு பொருளாதார மையத்திலும் நேற்று முருங்கை விற்பனை செய்யப்படவில்லை
மெகொட விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ பச்சை மிளகாய் மொத்த விற்பனை விலை 1000 ரூபாவிற்கு மேல் இருந்தது.
அதற்கமைய, ஏனைய சில இடங்களில் ஒரு கிலோ பச்சை மிளகாய் 1,100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் 2,000 ரூபாவுக்கு மேல் இருந்த ஒரு கிலோ கேரட்டின் மொத்த விலை 650 ரூபாவாக குறைந்துள்ளதாக நேற்று நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளது
Post a Comment