அதிக அளவில் பரவி வரும் ஜாம்பி வைரஸ்...!


தற்போது வன விலங்குகளுக்கு மத்தியில் ஒரு வகை சோம்பி வைரஸ் பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் குறித்த தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த நோய்த்தொற்று மான்கள் மத்தியிலேயே அதிகளவில் பரவி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, தென் கொரியா, கனடா மற்றும் வட அமெரிக்கா நாடுகளிலேயே இந்த வைரஸ் அதிகளவில் பரவி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த நோய்த்தொற்று மனிதர்களுக்கு மத்தியில் பரவக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றதா இல்லையா என்பது தொடர்பில் அமெரிக்க விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த நோய் காரணமாக விலங்குகளின் மூளைக்கு செல்லும் நரம்புகள் செயலிழக்கப்படுவதுடன், வயிற்றுப்போக்கு மற்றும் அவை உயிரிழப்பதற்கான சாத்தியமும் காணப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post