அரசியல் கேள்விகள் வேண்டாம்- விஜய், விஷால் பற்றி கருத்து கூற ரஜினி மறுப்பு...!



ஜெய்பீம்’ பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘வேட்டையன்’. இந்த படத்தில் ரஜினி கதாநாயகனாக நடிக்கிறார். மேலும், அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ராணா டகுபதி, பகத் பாசில் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

பெரும் எதிர்பார்ப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு 80 சதவீதம் முடிவடைந்துள்ளது. மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடந்து வருகிறது. ஐதராபாத்தில் நடந்த படப்பிடிப்பில் பங்கேற்ற ரஜினி இன்று சென்னை திரும்பினார்.

விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி கூறியதாவது:-

‘லால் சலாம்’ படம் ரசிகர்களின் அமோக வர வேற்பை பெற்று வெற்றியை அடைந்துள்ளது என தெரிவித்தார். இதைத் தொடர்ந்து ரஜினியிடம் விஜய், விஷால் அரசியல் பயணம் பற்றி கேட்டபோது, ‘அரசியல் கேள்விகள் வேண்டாம்’ என கருத்து கூற ரஜினி மறுத்துவிட்டார்.

Post a Comment

Previous Post Next Post